அறிவிப்பு மட்டும் தான்.. அதற்குள் தொடங்கிவிட்ட 'தளபதி 68' பிசினஸ்..!

  • IndiaGlitz, [Friday,September 15 2023]

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் ’தளபதி 68’ திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் பூஜை கூட இன்னும் போடவில்லை என்பதும் படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில வாரங்களாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் வியாபாரம் அதற்குள் தொடங்கி விட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி கோலிவுட் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாகவும் அதே போல் முன்னணி நிறுவனம் ஒன்று ஆடியோ உரிமையையும் பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின் விஜய்-யுவன் இணைவதால் பாடல்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தளபதி விஜய் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் சினேகா மற்றும் பிரியங்கா மோகன் நாயகிகளாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா உள்பட சிலர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

ஒரே விஷயத்தை பாராட்டிய அனிருத் - கீர்த்திசுரேஷ்.. வைரல் புகைப்படங்கள்..!

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரே விஷயத்தை பாராட்டி தங்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில் அந்த பதிவுகள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. 

'ஜவான்' படத்தின் ஒரு வார வசூல் தகவல்.. ரூ.1000 கோடியை நெருங்குமா?

ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில், அட்லி இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான 'ஜவான்' திரைப்படம் கடந்த 7ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான நிலையில்

சனாதனத்திற்கு ஆதரவு தெரிவித்த கஸ்தூரி: சத்யராஜ் மகள் திவ்யா கடும் விமர்சனம்..!

சனாதனத்திற்கு ஆதரவாக பேசிய நடிகை கஸ்தூரியை சத்யராஜ் மகள் திவ்யா  கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மறப்போமா.. மறப்போமா.. கணவரை இழந்தபின் நிம்மதியை தேடி காட்டுக்குள் செல்லும் சீரியல் நடிகை..!

சீரியல் நடிகை சுருதி சண்முகப்பிரியாவின்  கணவர் சமீபத்தில் மறைந்த நிலையில் அந்தத் துக்கத்தை  மறப்பதற்காக கணவருடன் அவர் சென்ற இடத்திற்கு மீண்டும் சென்று  தன்னை அந்த துக்கத்திலிருந்து

'லியோ' படத்தில் கெளதம் மேனனுக்கு இந்த கேரக்டரா? சரியான சம்பவம் இருக்குது..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டத்தில் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்த சில தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்