'தளபதி 68' படத்தின் வியாபாரம் அதற்குள் தொடங்கிவிட்டதா? ஆச்சரிய தகவல்..!

  • IndiaGlitz, [Sunday,July 16 2023]

தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது தெரிந்ததே. மேலும் இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படமான ‘தளபதி 68’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியை வெங்கட் பிரபு முடித்து விட்டதாகவும் இன்னும் ஒரு சில மாதங்களில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று மிகப் பெரிய தொகைக்கு வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட இடைவேளைக்கு பின்னர் விஜய் மற்றும் யுவன் சங்கர் ராஜா இணையும் படம் என்பதால் இந்த படத்தின் பாடல்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் பெரிய அளவில் வியாபாரம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

More News

நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும், புதுமையான ஆக்சன் திரைப்படம்:  பூஜையுடன் தொடக்கம்!

Directors Cinemas  தயாரிப்பில், U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன்

'லியோ' தயாரிப்பாளருடன் கோவில் கோவிலாக சுற்றும் சமந்தா.. வைரல் புகைப்படங்கள்..!

 தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் ஜெகதீசுடன் நடிகை சமந்தா கோவிலுக்கு சென்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த

ராகவா லாரன்ஸ் சகோதரர் முதல் படத்தின் டைட்டில் போஸ்டர்.. செம்ம டைட்டில் போல..!

நடிகர், நடன இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் என்பவர் நாயகனாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது என்பதை பார்த்தோம்

யுவனின் மலேசிய இசை நிகழ்ச்சியை தெறிக்கவிட்ட சிம்பு.. செம்ம டான்ஸ் வீடியோ வைரல்..!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி மலேசியாவில் நடந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் பாட்டு பாடி கொண்டு செம்ம டான்ஸ் ஆடிய சிம்புவின் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இரு நாட்டு பிரதமர்களுடன் செல்பி எடுத்து கொண்ட நடிகர் மாதவன்.. வைரல் வீடியோ..!

சமீபத்தில் பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற போது பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர்களுடன் நடிகர் மாதவன் செல்பி எடுத்துக் கொண்ட வீடியோ தற்போது இணையத்தில்