'வாரிசு' வெற்றி விழாவில் விஜய்.. 'தளபதி 67' படத்தின் செம கெட்டப்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் இந்த படம் குடும்பங்கள் போற்றும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது என்பதும் இந்த படம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் ’வாரிசு’ திரைப்படம் உண்மையான வெற்றியை பெற்றுள்ளதை அடுத்து படக்குழுவினர் சமீபத்தில் வெற்றி விழாவை கொண்டாடினார். இந்த விழாவில் விஜய் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் தமன், வெற்றி விழா புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் விஜய்யுடன் தமன், வம்சி, பாடலாசிரியர் விவேக் இருப்பதை பார்க்க முடிகிறது. மேலும் தளபதி விஜய் இந்த புகைப்படத்தில் ’தளபதி 67’ படத்தின் கெட்டப்பில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
What a Moment 🥹❤️ thanks dearest Anna @actorvijay 🤗
— thaman S (@MusicThaman) January 21, 2023
Not Able to get Out of this Truest HIGH ❤️🥁#MegaBlockbusterVarisu 💪🏼#VarisuCelebrations 💃 pic.twitter.com/Oym7999mQc
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com