'நாங்க சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவோம்.. 'தளபதி 67' டைட்டில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்துவரும் ’தளபதி 67’ படத்தின் தகவல்கள் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாமல் வெளிவந்து விஜய் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த படத்தில் நடித்து வரும் நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் தொலைக்காட்சி உரிமையை வாங்கிய நிறுவனங்களின் தகவல்களை அடுத்தடுத்து பட குழுவினர் வெளியிட்டனர் என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக ’தளபதி 67’ படத்தின் டைட்டில் வெளியிட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து ’தளபதி 67’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் ’நாங்கள் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவோம் என்று கூறி ’தளபதி 67’ படத்தின் டைட்டில் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதனை அடுத்து நாளை மாலை 5 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தளபதி விஜய் உடன் கூடிய ’தளபதி 67’ படத்தின் போஸ்டரும் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் வைரல் ஆகி வருகிறது.
விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 67’ படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
Naanga summave kaatu kaatunu kaatuvom.. 😉#Thalapathy67 TITLE is loading ■■■■■■■□□□ 67%
— Seven Screen Studio (@7screenstudio) February 2, 2023
Revealing at 5 PM Tomorrow 🔥#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @Jagadishbliss#Thalapathy67TitleReveal pic.twitter.com/FU61rBU55g
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments