'தளபதி 67' படக்குழுவினர்களின் பக்கா திட்டம்.. ரிலீஸ் எப்போது?

  • IndiaGlitz, [Tuesday,January 03 2023]

தளபதி விஜய் நடித்து வரும் 67வது படமான ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியது என்றும் நேற்றைய படப்பிடிப்பில் விஜய் கலந்து கொள்ளவில்லை என்றாலும் விஜய் இல்லாத காட்சிகளின் படப்பிடிப்பு நடந்ததாகவும் கூறப்பட்டது. மேலும் இன்று முதல் விஜய், படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை பக்காவாக திட்டமிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்றும் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் மே மாதம் முடிக்க அவர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ’தளபதி 67’ படத்தை ஆயுதபூஜை விடுமுறை தினத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் எனவே விஜய் ரசிகர்கள் ஆயுதபூஜைக்கு இந்த படத்தை படத்தின் ரிலீசை எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.

லோகேஷ் சினிமா யுனிவர்ஸ் என்ற அடிப்படையில் இந்த படத்தில் ரோலக்ஸ் உள்பட ஒருசில கேரக்டர் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படும் இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், நிவின்பாலி உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாகவும் அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லலித் தயாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் ரிலீஸுக்கு பின்னர் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.