முதல் நாளே தூள்.. 'தளபதி 67' படப்பிடிப்பு ஆரம்பமானதை உறுதி செய்த பிரபல நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 67’ படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் நடிகர் மற்றும் இயக்குனர் மனோபாலா இந்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாகவும் லோகேஷ் கனகராஜ் மற்றும் எங்கள் தளபதியை இன்று சந்தித்ததாகவும் தளபதி விஜய் அதே எனர்ஜியுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் முதல் நாளே ‘தூள்’ என்று அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
விஜய் ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படும் இந்த படத்தில் அர்ஜூன், கௌதம் மேனன், சஞ்சய்தத் உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாகவும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Thalapathi 67- shoot starts today...met lokesh and engal thalapathi...same energy and full swing..first day itself..thool...
— Manobala (@manobalam) January 2, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments