கிரவுண்ட்ல எத்தனை பேர் வேணா இருக்கலாம், ஆனா இது 'வாரிசு' பொங்கல் தான்: 'தளபதி 67' தயாரிப்பாளர்

  • IndiaGlitz, [Saturday,January 14 2023]

விஜய் நடித்த ’வாரிசு’ மற்றும் அஜித் நடித்த ’துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியானது. விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கேள்வியாக இருந்தது பொங்கல் வின்னர் யார்? என்பதுதான்.

கடந்த மூன்று நாட்களில் இரண்டு படங்களும் செய்த வசூலின் அடிப்படையில் ’வாரிசு’ மற்றும் ’துணிவு’ ஆகிய இரண்டு படங்களுமே கிட்டத்தட்ட சம அளவில் வசூல் செய்துள்ளதை அடுத்து இரண்டு படங்களும் பொங்கல் வின்னர் தான் என திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகிஸ்தர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அஜித் ரசிகர்கள் ’துணிவு’ படம் தான் பொங்கல் வின்னர் என்றும் விஜய் ரசிகர்கள் 'வாரிசு’ படம் தான் பொங்கல் வின்னர் என்றும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் ’தளபதி 67’ படத்தை தயாரிக்கும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் ’கிரவுண்ட்ல எத்தனை பேர் வேணாலும் இருக்கலாம், ஆனால் ஆடியன்ஸே டிக்ளர் பண்ணிட்டாங்க இது வாரிசு பொங்கல்ன்னு’ என்று பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து ’தளபதி 67’ பட தயாரிப்பாளரும் பொங்கல் வின்னர் ‘வாரிசு’ தான் என்பதை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.