'தளபதி 67' படத்தில் விஜய்யின் கேரக்டர் இதுதானா? ரசிகர்களுக்கு ஒரு மாஸ் தகவல்!

  • IndiaGlitz, [Monday,January 16 2023]

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் நான்கு நாட்களில்130 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்த இந்த படம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி தெலுங்கு மாநிலங்கள் மற்றும் வட இந்தியாவிலும் சக்கை போடு போட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படம் குறித்த சில முக்கிய தகவல்கள் கசிந்து வருகின்றன. குறிப்பாக இந்த படத்தில் விஜய் 46 வயது கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் ஒரு குழந்தைக்கு தந்தையாக நடிகை இருப்பதாக கூறப்படுகிறது. விஜய்யின் உண்மையான வயது 48 என்று இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட அவர் தனது இயல்பான வயதிலேயே உள்ள கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிகை த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்பட்டாலும் விஜய்க்கு ஜோடி இல்லை என்றும் கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ திரைப்படம் போல இந்த படத்தில் பாடல்கள் இல்லை என்று கூறப்படுகிறது .

விஜய் படம் என்றாலே பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகும் என்ற நிலையில் இந்த படத்தில் பாடல்கள் இல்லை என்பதால் இது முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் ’தளபதி 67’ படம் குறித்து கசிந்து வரும் செய்திகளை பார்க்கும்போது ரசிகர்களுக்கு செம ஆச்சரியமான விருந்து காத்திருக்கிறது என்பது தெரிய வருகிறது.