இது லிஸ்ட்லயே இல்லையே... தளபதி 67' படத்தில் இவருமா? அதிரடி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்துவரும் 'தளபதி 67’ படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி வருகிறது என்பதும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு அறிவிப்பு வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜெகதீஷ் தெரிவித்திருந்தார் என்பதையும் பார்த்தோம்.
ஏற்கனவே இந்த படத்தில் சஞ்சய் தத் மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் இணைந்திருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது டான்ஸ் மாஸ்டர் சாண்டி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘தளபதி 67’ படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல் ஏற்கனவே கசிந்து வந்தாலும் சாண்டி மாஸ்டர் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பதால் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த படத்தில் நடிப்பது குறித்து சாண்டி மாஸ்டர் கூறியபோது, ‘ எனது விருப்பத்துக்குரிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் 'தளபதி 67’ படத்தில் நடிக்க இருப்பது ஒரு வித்தியாசமான உணர்வு என்றும் புதிய அனுபவம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் எங்கள் தளபதி விஜய் உடன் படத்தில் நடிப்பதை நடிக்க இருப்பதை அடுத்து அந்தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் தெரியாமல் நான் தவித்து வருகிறேன் என்றும் சாண்டி மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
Expect the unexpected from Team #Thalapathy67
— Seven Screen Studio (@7screenstudio) January 31, 2023
D̶a̶n̶c̶e̶ m̶a̶s̶t̶e̶r̶ Actor @iamSandy_Off joins the cast of Thalapathy 67
Inaiki full ah update mela update dhan 😉#Thalapathy67Cast #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @Jagadishbliss pic.twitter.com/BchtQ9IU6Z
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments