'தளபதி 67' படத்தின் காஷ்மீர் ஷெட்யூல்.. செம வீடியோவை வெளியிட்ட படக்குழு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது காஷ்மீர் படப்பிடிப்பு குறித்த வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
‘தளபதி 67’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், அதன் பிறகு கொடைக்கானலிலும் நடந்தது. தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற உள்ளதை அடுத்து படக்குழுவினர் தனி விமான நிலையம் சென்னையில் இருந்து காஷ்மீர் சென்றனர். இது குறித்த புகைப்படங்கள் ஏற்கனவே வைரலானது.
இந்த நிலையில் ’தளபதி 67’ படக்குழுவினர் காஷ்மீர் ஷெட்யூல் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் சென்னையிலிருந்து காஷ்மீருக்கு விமானத்தில் விஜய், த்ரிஷா உட்பட படக்குழுவினர் அனைவரும் ஒட்டுமொத்தமாக விமானத்தில் செல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது
விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 67’ படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
#Thalapathy67 KASHMIR SCHEDULE BEGINS#Thalapathy @actorvijay @trishtrashers @anirudhofficial @PriyaAnand @duttsanjay @Dir_Lokesh @7screenstudio @akarjunofficial pic.twitter.com/7iWp2EZFXF
— Jagadish (@Jagadishbliss) February 3, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments