close
Choose your channels

'தளபதி 67' வியாபாரமும் தொடங்கிவிட்டதா? சுவாரஸ்யமான தகவல்!

Wednesday, November 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 66வது திரைப்படமான ’வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பே தற்போது தான் முடிவடைந்து பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ’தளபதி 67’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் அறிவிப்பு டிசம்பர் மாதமும் அதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ’தளபதி 67’ படத்தின் வியாபாரம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுவது போல் திரையுலகை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் ’தளபதி 67’ திரைப்படத்தில் பிரபல நட்சத்திரங்கள் பலர் நடிக்க இருப்பதால் இந்த படத்திற்கு இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சஞ்சய்தத், கௌதம்மேனன், பிரித்விராஜ் சுகுமாரன், அர்ஜுன், மிஷ்கின், நிவின்பாலி, மன்சூர் அலிகான் உள்பட பல பிரபலங்கள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. அதே போல் த்ரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி LCU என்ற ’லோகேஷ் சினிமா யுனிவர்ஸ்’ இந்த படத்தில் பயன்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இந்த நிலையில் ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பை சுமார் 8 மாதங்கள் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. தளபதி விஜய் இந்த படத்தில் 40 வயது பம்பாய் கேங்ஸ்டராக நடிக்கிறார் என்றும் அவருக்கு இந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டர் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை பெறுவதற்காக இப்போதே முன்னணி ஓடிடி நிறுவனமொன்று பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் மிகப்பெரிய தொகைக்கு அந்நிறுவனம் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை பெற தயாராக இருப்பதாகவும், இது குறித்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.

’தளபதி 67’ படத்தின் முறையான அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் இந்த படத்தின் வியாபாரம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment