'தளபதி 67' படத்தின் பிசினஸ் தகவல்களை வெளியிட்ட படக்குழு.. இத்தனை கோடி வியாபாரமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்து வரும் ’தளபதி 67’ படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்து அறிவிப்புகள் கடந்த இரண்டு நாட்களாக வெளிவந்தன என்பதும் இந்த தகவல்கள் இணையதளங்களை ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு டிரெண்டாகின என்பது தெரிந்தது.
இந்த நிலையில் தற்போது ’தளபதி 67’ படத்தின் பிசினஸ் தகவல்களையும் பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். முதல் கட்டமாக ’தளபதி 67’ படம் திரையரங்க ரிலீசுக்கு பின்ன நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவிக்கு விற்பனை செய்து உள்ளதாகவும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய தொகைக்கு கைமாறியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ’தளபதி 67’ படத்தின் ஆடியோ உரிமையை முன்னணி நிறுவனம் ஒன்று 16 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய், அனிருத் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய மூவரும் ’மாஸ்டர்’ படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளதை அடுத்து இந்த படத்தின் ஆடியோ உரிமை இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய், ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 67’ படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
Tudum, Our gang has a new member 😎
— Seven Screen Studio (@7screenstudio) February 2, 2023
And that is @NetflixIndia, our official digital partner of #Thalapathy67 🔥#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @Jagadishbliss pic.twitter.com/L33U4nZYNo
Andha saththam…
— Seven Screen Studio (@7screenstudio) February 2, 2023
Indhiya tholaikaaatchigalil mudhal muraiyaaaga 🔥
Happy to announce that @SunTV is the satellite partner of #Thalapathy67 💥#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @anirudhofficial @Jagadishbliss pic.twitter.com/Qhyzy6m4pk
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments