'தளபதி 66' பட அறிவிப்புக்கு பின் தயாரிப்பாளர், இயக்குனர் செய்த முதல் வேலை!

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் ’தளபதி 66’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது என்பதும், இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளார் என்பதையும், பிரபல இயக்குனர் வம்சி இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது

மேலும் இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்பட அனைத்து விவரங்களையும் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தயாரிப்பு தரப்பிலிருந்து அறிக்கை ஒன்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் நடிக்கவுள்ள ’தளபதி 66’ திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர் வம்சி மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு ஆகிய இருவரும் குடும்பத்துடன் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து உள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'விக்ரம்' படத்தில் லோகேஷ் வைக்கும் சஸ்பென்ஸ்: ரசிகர்கள் ஆச்சரியம்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும்

வைரலாகும் 'சர்வைவர்' ஐஸ்வர்யாவின் போல்டான போட்டோஷூட்!

ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சர்வைவர்' நிகழ்ச்சி மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பது தெரிந்ததே. ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் நடத்தி வரும் இந்த நிகழ்ச்சியில்

திருப்பதியில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா: வைரல் புகைப்படம்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது காதலருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் சென்ற நிலையில் அதுகுறித்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

'மாநாடு' டிரைலர்: ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் ரிலீஸ் தேதி தீபாவளி என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக

'சில்லுன்னு ஒரு காதல்' ஸ்ரேயாவா இவர்? லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்!

சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த திரைப்படங்களில் ஒன்றான 'சில்லுனு ஒரு காதல்' என்ற திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.