'தளபதி 66' படத்தின் அட்டகாசமான டைட்டில் & பர்ஸ்ட்லுக் போஸ்டர்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ’தளபதி 66’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு 6 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சற்றுமுன் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஏற்கனவே வெளியான தகவலின்படி இந்த படத்திற்கு ’வாரிசு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தளபதி விஜய் கோட்-சூட் காஸ்ட்யூமில் அட்டகாசமாக உட்கார்ந்து இருக்கும் காட்சியும் ஃபர்ஸ்ட்லுக்கில் உள்ளதை அடுத்து இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது
மேலும் இந்த போஸ்டரில் டேக்லைனாக ‘THE BOSS RETURNS' என்றும் குறிப்பிட்டுள்ளதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை வம்சி இயக்கி வருகிறார். தில் ராஜூ தயாரிப்பில் தமன் இசையில் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவின் கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Varisu pic.twitter.com/b2bwNNAQP8
— Vijay (@actorvijay) June 21, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com