'தளபதி 66' படம் குறித்த சூப்பர் அறிவிப்பு: டுவிட்டரில் வெளியிட்ட புஸ்ஸி ஆனந்த்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 66’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த படம் குறித்த சூப்பர் அறிவிப்பு ஒன்றை விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தி,ல் தில் ராஜூ தயாரிப்பில், தமன் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 66’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது என்பதும் இந்த படப்பிடிப்பில் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் ’தளபதி 66’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக புஸ்ஸி ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளோடு புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த படம் 2023ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடு என்பதையும் அவர் உறுதி செய்துள்ளார். இந்த நிலையில் ’தளபதி 66’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, சம்யுக்தா, யோகிபாபு, ஷாம் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 21 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Schedule Wrap For #Thalapathy66.!!
— Bussy Anand (@BussyAnand) May 26, 2022
Thalapathy @actorvijay Sir,@Jagadishbliss @RIAZtheboss pic.twitter.com/8T7jHhyswD
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com