close
Choose your channels

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு கிடைக்க போக்கும் ஆச்சரியம்?

Wednesday, June 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த ஆண்டு விஜய் தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் நிலையில் அவருடைய ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் ’தளபதி 66’ படம் குறித்த தகவல்கள் கசிந்து விட்டன. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி ’தளபதி 66’ படத்தை இயக்க இருப்பதாகவும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ஜூன் 22ஆம் தேதி தளபதி விஜய்யின் பிறந்த நாளின்போது ’தளபதி 66’ படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் அதே நேரத்தில் விஜய் ஒரு படத்தை முடித்த பின்னர்தான் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ஆண்டு ஸ்பெஷலாக அவர் ’தளபதி 66’ திரைப்படத்தின் அறிவிப்பை முன்கூட்டியே வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் உண்மையில் இது நடக்குமா? என்பதை ஜூன் 22 வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment