'தளபதி 65' ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா?

  • IndiaGlitz, [Friday,May 21 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ மற்றும் தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 65’ ஆகிய இரண்டு திரைப்படங்களையும் தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ’அண்ணாத்த’ படத்தை தீபாவளி திருநாளிலும், ’தளபதி 65’ படத்தை பொங்கல் திருநாளிலும் வெளியிட திட்டமிட்டு உள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ’அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதால் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக செய்து திட்டமிட்டபடி தீபாவளி அன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் ’தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்க முடியவில்லை. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மே மாதம் முதல் வாரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இனி எப்போது தொடங்கும் என்று தெரியாமல் உள்ளது.

இதனால் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது தமிழ்ப் புத்தாண்டுக்கு தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை ’தளபதி 65’ திரைப்படம் தமிழ் புத்தாண்டுக்கு தள்ளிப்போனால் பொங்கல் தினத்தில் கமல்ஹாசனின் ’விக்ரம்’ வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

நடிப்பு நாயகன் மோகன்லாலுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

மலையாள சூப்பர் ஸ்டார் மற்றும் நடிப்பு நாயகன் மோகன்லால் இன்று தனது 61வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகினர் பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை

மனைவியுடன் சென்று தடுப்பூசி போட்டு கொண்ட பிரபல நடிகர்: வைரல் வீடியோ

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரஸ் ஆட்டிப் படைத்துக் கொண்டு வரும் நிலையில் கொரோனா வைரஸில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள

இதை கட்டாயமாக்கினால் கொரோனாவுக்கு தீர்வு கிடைக்கும்: தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு டுவிட்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேலாகியும் கொரோனா வைரஸ் பாதிப்பு

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கேப்டன்....!தொண்டர்கள் மகிழ்ச்சி....!

நேற்று(19.05.2021) அதிகாலை 3.30 மணியளவில், தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு மூச்சுத்திணறல்

மே மாத மின்சார ரீடிங் எப்படி எடுப்பது? மின்வாரியம் அறிவிப்பு

மே மாதத்திற்கான மின்சார ரீடிங்கை மின் நுகர்வோரே எடுக்கலாம் என மின்சார வாரியம் அனுமதி அளித்துள்ளது.