'ஜார்ஜியாவில் 'தளபதி 65' படக்குழுவினர்: விஜய் காஸ்ட்யூம் டிசைனர் வெளியிட்ட வீடியோ

  • IndiaGlitz, [Thursday,April 08 2021]

நேற்று முன்தினம் தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் சைக்கிளில் சென்று வாக்கு அளித்த தளபதி விஜய் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அன்று இரவு சென்னையிலிருந்து ஜார்ஜியா கிளம்பினார்

’தளபதி 65’ படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் ஜார்ஜியா சென்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது விஜய்யின் காஸ்ட்யூம் டிசைனர் பல்லவி என்பவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ள சிறிய வீடியோ ஒன்றில் படக்குழுவினர் அனைவரும் ஜார்ஜியா சென்ற அடைந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்

இந்த நிலையில் ’தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் இன்னும் ஓரிரு நாள்களில் தொடங்கும் என்றும் ஒரு சில வாரங்கள் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பு நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தை நெல்சன் இயக்குகிறார் என்பதும் அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

தடுப்பூசி செலுத்தி கொண்ட பிரபல நடிகைக்கு கொரோனா பாதிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை நக்மா என்பதும் தற்போது அவர் காங்கிரஸ் கட்சியில் முக்கிய நிர்வாகியாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

அரசு,தனியார் அலுவலகங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தலாம்...! மத்திய அரசு...!

கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் தகுதியுடைய 100 பணியாளர்கள் இருந்தால் போதும், தனியார் மற்றும்  அரசு அலுவலகங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தலாம் என்று மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

ஸ்டாலினை முந்திய பழனிச்சாமி...! வாக்குப்பதிவுகள் எத்தனை வீதம் தெரியுமா...?

தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்த நிலையில், வாக்களித்தவர்களின் வாக்குப்பதிவுகள் வீதம் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சத்யாபிரதா சாகு வெளியிட்டுள்ளார்.

'தட்டிப்புட்டா தட்டிப்புட்டா இதயக்கதவை' இசைஞானியின் குரலில் 'மாமனிதன்' பாடல்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான 'மாமனிதன்' என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும் நிலையில்

போஸ்டர் அடிச்சதெல்லாம் வேஸ்ட்டா? அரியர் தேர்வுகளை நடத்த ஐகோர்ட் உத்தரவு

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது என்பது தெரிந்ததே.