கொரோனா பரவல் எதிரொலி: தளபதி 65 படக்குழு எடுத்த அதிரடி முடிவு!

  • IndiaGlitz, [Friday,April 09 2021]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தளபதி 65’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் உள்பட படக்குழுவினர் ஜார்ஜியா சென்று உள்ளனர் என்பதும் அங்கு படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியா உள்பட உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை அடுத்து ஏற்கனவே திட்டமிட்டதை விட விரைவில் இந்த படத்தை முடிக்க படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஜார்ஜியாவில் இந்த படத்தின் மூன்றில் ஒரு பகுதி படப்பிடிப்பு நடத்தப்படும் என்றும் அதன்பிறகு சென்னை வந்து இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘மாஸ்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருந்தும் கொரோனா வைரஸ் காரணமாக பல மாதங்கள் காத்திருந்தது போல் ’தளபதி 65’ படத்திற்கு நிலைமை வரக்கூடாது என்பதற்காகவும் தியேட்டர்களுக்கு அதிக கெடுபிடிகள் பிறப்பிக்கப்படும் முன்னரே இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என படக்குழு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ’தளபதி 65’ திரைப்படம் எதிர்பார்த்ததைவிட விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

More News

சிங்கிள்பீஸ் பிகினியில் மாலத்தீவில் கலக்கும் ஜான்வி கபூர்! வைரல் புகைப்படங்கள்

மறைந்த இந்தியத் திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டாரான ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உண்டு என்பதும் அவர்களில் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்தது

ஏழுமலையான் அவதாரத்தில் நித்யானந்தா: எல்லை மீறி செல்லும் சேட்டை!

பாலியல் வன்முறை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நித்தியானந்தா திடீரென இந்தியாவை விட்டு வெளியேறி 'கைலாசம்' என்ற புதிய நாட்டை உருவாக்கி இருப்பதாகவும்

இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா: சிஎஸ்கே வியூகங்கள் என்ன?

ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடந்து வரும் நிலையில் இன்று முதல் அடுத்த ஐபிஎல் தொடங்குகிறது. இன்றைய முதல் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள்

இணையத்தை கலக்கும் விஜய் நாயகியின் கேரள சேலை புகைப்படங்கள்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தளபதி 65' என்பதும்

தனுஷ் பட நாயகிக்கு கொரோனா பாசிட்டிவ்: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜெகமே தந்திரம்' என்ற படத்தின் நாயகிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.