தளபதி 65' நாயகியின் ஹாட் போட்டோஷூட்: வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Tuesday,June 01 2021]

மிஷ்கின் இயக்கிய ’முகமூடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே அதன்பின் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிரபலமானார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ’தளபதி 65’ திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் இவருடைய காட்சிகளின் படப்பிடிப்புகள் அடுத்த கட்ட படப்பிடிப்பில் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பூஜாவுக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 14 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன்னர் ஒரு ஹாட் போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ளார் அதில் இந்த போட்டோஷூட்டின்போது அவர் பயன்படுத்திய உடைகள், அணிகலன்கள், மேக்கப் பொருட்கள் உள்ளிட்டவற்றையும் காண்பித்துள்ளார். மேலும் கவர்ச்சி நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் பல வித்தியாசமான போஸ்களில் இந்த போட்டோஷூட்டில் கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டோ எடுக்க கடந்த சில நாட்களாக தான் திட்டமிட்டுள்ளதாகவும் தற்போதுதான் அவருக்கு நேரம் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த போட்டோஷூட்டில் பல வேடிக்கையான நிகழ்வுகளும் நடந்ததாகவும் பூஜா தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.