'தளபதி 65' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’தளபதி 65’ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தவுடன் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் வரும் 21ஆம் தேதி தளபதி விஜய் தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் நிலையில் அன்றைய தினம் அவரது ’தளபதி 65’ திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை உறுதி செய்துள்ளது
‘தளபதி 65’ திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஜூன் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்து, இது குறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த அறிவிப்பால் தளபதியின் பிறந்த நாளின் போது விஜய் ரசிகர்களுக்கு சரியான விருந்து கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.,
Enna nanba? First look ah? #Thalapathy65FLon21st #Thalapathy65FirstLook @actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja #Thalapathy65 pic.twitter.com/11buRhwU3Y
— Sun Pictures (@sunpictures) June 18, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments