'தளபதி 64' படத்தின் அசத்தலான அப்டேட்!

  • IndiaGlitz, [Saturday,August 24 2019]

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள அவருடைய 63வது படமான 'பிகில்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் தீபாவளி தினத்தில் ரிலீஸ் செய்ய அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் விஜய் நடிக்கவுள்ள அடுத்த படமான 'தளபதி 64' படத்தின் புதிய அசத்தலான அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளிவரவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். எனவே இன்று மாலை 6 மணிக்கு சமூக வலைத்தளங்களை தெறிக்க வைக்க தளபதியின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

'தளபதி 64' படத்தில் கைரா அத்வானி, கபீர்சிங் உள்பட ஒருசில நட்சத்திரங்கள் நடிக்க வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தாலும் இன்றைய அப்டேட்டில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் குறித்த தகவல், படப்பிடிப்பு தொடங்கும் நாள் குறித்த தகவல் மற்றும் படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

கார்த்தியின் 'கைதி' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள 'தளபதி 64' திரைப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கவுள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்!

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 66

விஜய்யின் 'பிகில் படத்துடன் மோதுகிறதா பிரபல நடிகரின் படம்?

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ்

தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் புதிய அப்டேட்!

தனுஷ் நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இந்த படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது

பிரசவம் பார்த்த டாக்டருக்கு நன்றி சொன்ன பிக்பாஸ் நடிகை!

பிக்பாஸ் முதல் சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான சுஜா வருணி, சிவாஜி பேரன் சிவகுமாரை கடந்த ஆண்டு திருமணம் செய்த நிலையில் சமீபத்தில் அவர் கர்ப்பமானார்

ஷெரினிடம் வேலை செய்யாத வனிதாவின் வத்திக்குச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பார்வையாளர்கள் வனிதாவை வெளியேற்றிய பின்னரும், மீண்டும் வனிதாவை பிக்பாஸ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாளராக அனுமதித்துள்ளது