'தளபதி 63' படத்தின் ஆச்சரியமான தமிழக வியாபாரம்

  • IndiaGlitz, [Saturday,June 08 2019]

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்கும் அதன்பின்னர் இந்த படத்தின் புரமோஷனும் படிப்படியாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ உரிமையின் வியாபாரம் முடிந்தது என்ற செய்தியை பார்த்தோம். தற்போது இந்த படத்தின் தமிழக உரிமையை வளர்ந்து வரும் பிரபல விநியோகிஸ்த நிறுவனமான ஸ்க்ரீன் சீன் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது ஏற்கனவே இந்த நிறுவனம் இந்த ஆண்டில் 'தடம்', நட்பே துணை' ஆகிய திரைப்படங்களை வெளியிட்டுள்ளது என்பதும் இரண்டுமே வர்த்தக அளவில் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படம் விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் வளர்ந்து வருகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

சசிகுமாரின் அடுத்த படத்தில் இணைந்த சரத்குமார்!

பிரபல நடிகர் சசிகுமார் நடித்த 'நாடோடிகள் 2' மற்றும் 'கென்னடி கிளப்' ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் அவர் தற்போது நடித்து வரும் படங்களில் கல்பத்ரு பிக்சர்ஸ்

மணிரத்னம் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில், அவர் தற்போது 'பொன்னியின் செல்வன்'

இனிமேல் இந்த தப்பை செய்ய மாட்டேன்: 'டகால்டி' குறித்து சந்தானம்

சந்தானம் நடித்து வரும் 'டகால்டி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தில் விஜயசாந்தி!

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை விஜயசாந்தி,

அமைச்சரும் இல்லை, துணை முதல்வரும் இல்லை: ரோஜாவுக்கு என்ன பதவி?

நடைபெற்று முடிந்த ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி ஆட்சியை பிடித்தது.