'தளபதி 63' படத்தின் தரமான அப்டேட்!

  • IndiaGlitz, [Thursday,June 06 2019]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இரண்டு பாடல்களின் பணிகள் முற்றிலும் முடிந்துவிட்டது என்றும், இந்த பாடல்களை பார்த்த முதல் நபர் என்ற பெருமை தனக்கு உண்டு என்றும் சமீபத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு செய்திருந்த டுவீட்டை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது மூன்றாம் பாடலின் பணியும் தொடங்கிவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்தி வெளிவந்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்த இந்த பாடலுக்கு பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுத தொடங்கியுள்ளார்.

இந்த தரமான அப்டேட்டால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கும் உள்ளனர். மேலும் ஜூன் 22ஆம் தேதி தளபதியின் பிறந்த நாள் வரவிருப்பதால் அதற்கு முன்னர் இந்த படம் குறித்த மிகப்பெரிய அப்டேட் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படம் விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் வளர்ந்து வருகிறது. தீபாவளி அன்று வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
 

More News

தற்கொலை செய்துகொள்வோர் எல்லாம் அனிதா அல்ல: கஸ்தூரியின் தன்னம்பிக்கை டுவீட்

நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் இந்த தேர்வில் தோல்வி அடைந்ததால் நேற்று இரண்டு மாணவிகள் பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டனர்.

சூர்யா படத்தில் இணைந்த 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' ஸ்டண்ட் கலைஞர்!

ஹாலிவுட் திரைப்படமான ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' படத்தின் அனைத்து பாகங்களும் சூப்பர்ஹிட் ஆனது என்பதும், இந்த படங்களின் வெற்றிக்கு ஸ்டண்ட் காட்சிகள் மிக முக்கிய காரணம் என்பதும் தெரிந்ததே

தமிழகத்தில் இனி 24 நேரமும் கடை திறந்திருக்கும்: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் இனி இரவு, பகல் என பேதமின்றி 24 மணி நேரமும் கடைகள், தொழிற்சாலைகள் இயங்கும் என தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

தற்கொலையை படுகொலை என்று கூறிய ரஞ்சித்: கொந்தளித்த நெட்டிசன்கள்

நேற்று நீட் தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில் தமிழகத்தில் மட்டும் இந்த தேர்வை எழுதிய சுமார் 50ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஒரு பாலத்தையே ஆட்டைய போட்டுட்டாங்களா? ஒரு அதிர்ச்சி தகவல்

இதுவரை பணம், நகைகள் தான் கொள்ளை போவதை பார்த்திக்கின்றோம், கேள்விப்பட்டிருக்கின்றோம், வடிவேலு ஒரு படத்தில் 'என் கிணத்தை காணோம்' என்று காமெடிக்கு சொல்வதையும் பார்த்திருக்கின்றோம்.