தளபதி 63 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு. விஜய் ரசிகர்கள்  குஷி.

  • IndiaGlitz, [Wednesday,November 14 2018]

தளபதி விஜய் நடித்த 'சர்க்கார் ' திரைப்படம் கடந்த தீபாவளி நாளில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போவது வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் இன்று மாலை 4.30 மணிக்கு தளபதி விஜய்யின் 63வது படம் குறித்த அதிகார்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வந்துள்ளது. இந்த தகவல் விஜய் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.

தளபதி விஜய்யின் 63வைத்து படத்தை அட்லி இயக்கவுள்ளதாகவும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதும் உறுதி செய்யப்படட நிலையில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் இன்றைய அறிவிப்பில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.