'கத்தி' படத்துடன் கனெக்சன் ஆகும் 'தளபதி 63'
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர் பம்பரமாக சுற்றி படத்தின் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ அர்ச்சனா கல்பாதி, தளபதி விஜய்யின் வெறித்தனமான ரசிகை என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் 'கத்தி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை பதிவு செய்து 'இந்த போஸ்டர் எனக்கு மிகவும் பிடித்த ஒரு போஸ்டர். இதை நான் என்னுடைய அலுவலகத்திலேயே வைத்துள்ளேன். இந்த போஸ்டருக்கு இணையான ஒரு அட்டகாசமான போஸ்டர் 'தளபதி 63' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டராக வெளிவரும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்' என்று கூறியுள்ளார். ஆகமொத்தம் 'தளபதி 63' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கே அவரது ரசிகர்களுக்கு ஒரு அட்டகாசமான விருந்தாக அமையும் என்பது உறுதியாகியுள்ளது.
விஜய், நயன்தாரா, 'பரியேறும் பெருமாள்' கதிர், யோகிபாபு, விவேக், ஆனந்த்பாபு, தீனா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
This is one of my all time favourite #Vijay Sir posters designed by the super talented @gopiprasannaa that I have in my office. Hopefully will have another poster with our banner very very soon ?????? #Thalapathy63 #Ags ?? pic.twitter.com/SNmKvrauPf
— Archana Kalpathi (@archanakalpathi) March 2, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com