மின்னல் வேகத்தில் தயாரான 'தளபதி 62' படத்துவக்க போஸ்டர்

  • IndiaGlitz, [Friday,January 19 2018]

தளபதி விஜய் நடிக்கும் 'தளபதி 62' படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று தொடங்கியதாக புகைப்படத்துடன் கூடிய செய்தி சற்றுமுன் இணையதளங்களில் வெளியானது. இந்த புகைப்படத்தில் விஜய் கிளாப் அடிப்பது போன்று உள்ளது. மேலும் இந்த போஸ்டரில் 'இன்று முதல் படப்பிடிப்பு அது தளபதியால் துவக்கம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த புகைப்படம் வெளியாகி ஒருசில நிமிடங்களே ஆன நிலையில் 'தளபதி 62' படத்தின் துவக்கவிழா போஸ்டரை விஜய் ரசிகர்கள் தயார் செய்து சுவரில் ஒட்ட தொடங்கிவிட்டனர். அதிலும் ஒன்றல்ல மூன்றுவிதமான போஸ்டர்களை ரசிகர்கள் தயார் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வடசென்னை மாவட்ட விஜய் ரசிகர்களின் இந்த மின்னல் வேகம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.