'தளபதி 62' படப்பிடிப்பு தொடங்குவது எப்போது? புதிய தகவல்

  • IndiaGlitz, [Sunday,April 22 2018]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வந்த நிலையில் கோலிவுட் திரையுலகின் ஸ்டிரைக் காரணமாக கடந்த மார்ச் 1ஆம் தேதி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இருப்பினும் தயாரிப்பாளர் சங்கத்திடம் அனுமதி பெற்று இடையில் ஒருசில நாட்கள் மட்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது

இந்த நிலையில் தற்போது கோலிவுட் ஸ்டிரைக் முடிவுக்கு வந்துவிட்டதை அடுத்து புதிய திரைப்படங்களின் ரிலீஸ் மற்றும் படப்பிடிப்புகள் தொடங்கிவிட்டது. இதனை அடுத்து 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வி விஜய் ரசிகர்களிடையே இருந்தது

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 25ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படப்பிடிப்பில் சமீபத்தில் இந்த படத்தில் இணைந்த வரலட்சுமி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு இருக்கும் என்றும், வரலட்சுமி ஒரு பாடல் மற்றும் சண்டைக்காட்சிகளில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.