புத்தாண்டுக்கு முன் 'தளபதி 62' படத்தின் அறிவிப்பு?

  • IndiaGlitz, [Tuesday,December 26 2017]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 62' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் 'தளபதி 62' படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு ஏற்கனவே வெளிவந்துவிட்டது என்பது தெரிந்ததே. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும், கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவும் செய்யவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைப்பார் என தெரிகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட அனைத்து நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு வரும் புத்தாண்டுக்கு முன்பே அறிவிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது. இன்னும் புத்தாண்டு பிறக்க ஐந்து நாட்களே உள்ள நிலையில் தளபதி விஜய் ரசிகர்களுக்கு சரியான விருந்து காத்திருக்கின்றது என்பது மட்டும் நிச்சயம் தெரிகிறது.

More News

சூர்யாவாக மாறிய அல்லு அர்ஜூன்

சமீபத்தில் நடந்த படவிழா ஒன்றில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் ரசிகர்கள் மீது கோபம் அடைந்ததாக பரபரப்பான செய்தி வெளியான நிலையில் மீண்டும் ஒருமுறை அவர் ரசிகர்களிடம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

இரும்புத்திரை படத்தில் விஷால், சமந்தா கேரக்டர் அறிவிப்பு

விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'இரும்புத்திரை' படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் ஜனவரியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 ரஜினி அரசியலுக்கு வருவது, அவரது குடும்பத்திற்கும் நல்லதல்ல: தமிழக அமைச்சர்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்பது அனேகமாக வரும் 31ஆம் தேதி தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ரஜினி இப்போதைக்கு எம்.எல்.ஏ மட்டும் ஆகலாம், முதல்வராக முடியாது: பிரபல நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது ரசிகர்களின் சந்திப்பின்போது வரும் 31ஆம் தேதி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பதாக கூறிய நிலையில்

அரசியல் ஆழம் தெரிந்ததால்தான் அமைதியாக உள்ளேன்: ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று ரசிகர்களை இரண்டாம் கட்டமாக சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து வருகிறார்.