'லியோ' படத்தின் பிசினஸ் இத்தனை கோடியா? தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறை..!

  • IndiaGlitz, [Friday,July 21 2023]

தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக ’லியோ’ திரைப்படம் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய்க்கு பிசினஸ் நடத்தி உள்ளதாக கூறப்படும் செய்தி கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமை தவிர மற்ற அனைத்து பிசினஸ் முடிந்துவிட்ட நிலையில் தற்போது இந்த படம் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் பிசினஸ் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

லியோ’ படத்தின் டிஜிட்டல் உரிமை ரூ.140 கோடி, சேட்டிலைட் உரிமை ரூ.90 கோடி, வெளிநாட்டு உரிமை ரூ.60 கோடி, ஆடியோ உரிமை ரூ.16 ,கோடி ஆந்திரா தெலுங்கானா மாநில உரிமை ரூ.21 கோடி, கேரளா உரிமை ரூ.16 கோடி, ஹிந்தி உரிமை ரூ.28 கோடி, கர்நாடக உரிமை ரூ.15 கோடி என இதுவரை ரூ.385 கோடி வியாபாரம் நடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளனர்.

மேலும் தமிழக ரிலீஸ் உரிமை தொகையையும் சேர்த்தால் 500 கோடியை நெருங்கி விடும் என்றும் கூறப்படுகிறது. தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் ரூ.500 கோடி பிசினஸ் நடத்தியது இல்லை என்ற நிலையில் ’லியோ’ திரைப்படம் மிகப்பெரிய சாதனை செய்துள்ளதாக கருதப்படுகிறது.