நடிகை கீர்த்தி சுரேஷ்  வெளியிட்ட 'தலைமை செயலகம்' சீரிஸ் டிரைலர்.. ஜீ தமிழில் ரிலீஸ் எப்போது?

  • IndiaGlitz, [Thursday,May 09 2024]

தமிழக அரசியல் பின்னணியில், இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் சீரிஸான தலைமைச் செயலகம் சீரிஸ் மே 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த சீரிஸ் தமிழக அரசியலில் இரக்கமற்ற அதிகார வேட்கையை கூறும் அழுத்தமான பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ராடான் மீடியா வொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் தலைமைச் செயலகம் சீரிஸை தயாரித்துள்ளார். 8 எபிசோட் கொண்ட பொலிடிகல் சீரிஸில் கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒரு பெண்ணின் இடைவிடாத அதிகார வேட்கை, பேராசை, வஞ்சகம் ஆகியவை பின்னிப்பிணைந்த தமிழக அரசியலின் கதையைச் சொல்லும் இந்த சீரிஸ் மே 17 அன்று ZEE5 இல் ஸ்ட்ரீமாகவுள்ளது.

தமிழக அரசியல் களத்தின் பின்னணியில் நடக்கும் கதையில், முதல்வர் அருணாசலம் 15 ஆண்டுகளுக்கு முந்தைய ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொள்கிறார், இந்த விசாரணையால் அவரைச் சுற்றியுள்ளவர்கள் முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுவதோடு அதற்காகத் தீவிரமாக இயங்க ஆரம்பிக்கிறார்கள். இதற்கிடையில், ஜார்க்கண்டில் உள்ள ஒரு தொலைதூர சுரங்க கிராமத்தில், சிபிஐ அதிகாரி நவாஸ் கான் இரண்டு தசாப்தங்கள் பழமையான கொலை வழக்கை ஆராய்கிறார். பரபரப்பான சென்னையில், புறநகர்ப் பகுதியில் கிடைக்கும் துண்டிக்கப்பட்ட கை மற்றும் தலையினை குறித்து டிஜிபி மணிகண்டன் ஒரு பயங்கரமான கண்டுபிடிப்பு குறித்து விசாரணையை தொடங்குகிறார். இந்த கதை விரிய விரிய வேறுபட்ட பல நிகழ்வுகளை ஒன்றிணைகின்றது, காலத்தால் மறைக்கப்பட்ட மறந்துபோன உண்மைகளின் மீது ஒளி பாய்ச்சுகிறது.

பதபதவைக்கும் சஸ்பென்ஸ், சூழ்ச்சி மற்றும் சிலிர்க்க வைக்கும் உண்மைகளை வெளிப்படுத்தும் ‘தலைமைச் செயலகம்’ சீரிஸ் ZEE5 இல் பிரத்தியேகமாக 17 மே 2024 முதல் கண்டுகளியுங்கள்.

 

More News

அட்சய திருதியை 2024: நாள், தேதி, சிறப்பு அம்சம் என்ன? அட்சய திருதியை அன்று செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும் !

புகழ்பெற்ற ஜோதிடர் உஷா கணேஷ் உடன் அக்ஷய திருதியாவின் மகத்துவம், பூஜைகள் மற்றும் பாரம்பரியங்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்ளுங்கள்.

சந்தோஷ் சிவன் வீட்டில் நிகழ்ந்த எதிர்பாராத துக்கம்.. திரையுலகினர் இரங்கல்..!

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரர் எதிர்பாராத விதமாக மாரடைப்பால் காலமானதையடுத்து திரையுலகினர் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

ரூ.2 கோடி சம்பளம் கொடுத்தும் நடிக்க முடியாது என கூறிய சாய் பல்லவி.. என்ன காரணம்?

2 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க விளம்பர நிறுவனம் ஒன்று முன் வந்த போதிலும் அதில் நடிக்க முடியாது என நடிகை சாய்பல்லவி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'தளபதி 69' படத்தில் இணைகிறாரா 'மாஸ்டர்' பிரபலம்.. எச். வினோத் நெருங்கிய நண்பர்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 69' படம் குறித்த தகவல்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் நாயகி இவர்தான்.. 900 கோடி வசூல் படத்தில் நடித்தவர்..!

பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்தில் 900 கோடி வசூல் செய்து சாதனை செய்த படத்தின் நாயகி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.