இது எம்ஜிஆரா? அரவிந்த்சாமியா? ரசிகர்கள் ஆச்சரியம்!

  • IndiaGlitz, [Friday,January 17 2020]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் நடித்து வரும் அரவிந்த்சாமியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று காலை வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

அச்சு அசல் எம்ஜிஆர் போலவே அரவிந்த்சாமி இருப்பதாக எம்ஜிஆரின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் அரவிந்த்சாமி தனது சமூக வலைப்பக்கத்தில் ’தலைவி’ படத்தின் டீசரை வெளியிட்டு உள்ளார் எம்ஜிஆர் நடித்த ’புதிய பூமி’ என்ற படத்தில் இடம் பெற்ற பாடலான ’நான் உங்கள் வீட்டுப் பிள்ளை’ என்ற பாடலை அரவிந்த்சாமி எம்ஜிஆர் வேடத்தில் பாடுவது போல் இந்த டீசரில் இருக்கிறது.

இந்தப் பாடலையும் அதில் அரவிந்த்சாமியின் கெட்டப் மற்றும் பாடிலேங்குவேஜை பார்த்தபோது உண்மையிலேயே இது அரவிந்த்சாமி தானா அல்லது எம்ஜிஆரே மீண்டும் உயிர்த்தெழுந்து இந்த படத்தில் நடித்துள்ளாரா? என்று கூறுமளவுக்கு இருந்ததாக அனைவரையும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். எம்ஜிஆர் கேரக்டரின் சரியான தேர்வே இந்த படம் வெற்றி பெறுவதற்கு தேவையான தகுதியை பெற்றுள்ளதாக சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.