'உந்தன் கண்களில் என்னடியோ? எம்ஜிஆர் ஜெயலலிதாவாகவே மாறிய 'தலைவி' பாடல்!

  • IndiaGlitz, [Monday,August 30 2021]

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’ படத்தில் இடம்பெற்ற ’உந்தன் கண்களில் என்னடியோ’ என்ற பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த பாடல் வைரலாகி வருகிறது

ஜிவி பிரகாஷ் இசையில், நகுல் அபயங்கர் மற்றும் நிரஞ்சனா ரமணன் குரலில், மதன் கார்க்கி பாடல் வரிகளில் உருவாகிய ’உந்தன் கண்களில் என்னடியோ’ என்ற பாடல் சற்று முன் வெளியாகி உள்ளது. அரவிந்த்சாமி மற்றும் கங்கனா ரனாவத் ஆகிய இருவரும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கேரக்டரில் இந்த படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த பாடலில் அச்சு அசலாக இருவரும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகவே மாறிவிட்டதாக இந்த பாடலுக்கு கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது

முதல் முறை கேட்கும்போதே பாடல் மனதை கவர்ந்துவிட்டதாகவும் ஜிவி பிரகாஷ் மிக அருமையாக கம்போஸ் செய்திருப்பதாகவும், உண்மையாகவே எம்ஜிஆர் ஜெயலலிதா நடித்த படங்களுக்கான இசை போன்று இந்த பாடல் இருப்பதாகவும் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஏ.எல். விஜய் இயக்கத்தில் கங்கனா ரனவத், அரவிந்த்சாமி, நாசர், பாக்யஸ்ரீ, ராஜ் அர்ஜூன், மதுபாலா உள்பட பலர் நடித்த இந்த திரைப்படம் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.