'தலைவி' படத்தின் எம்ஜிஆர் லுக்: ஒரு ஆச்சரியமான தகவல்
- IndiaGlitz, [Thursday,January 16 2020]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்று கூறப்படும் ’தலைவி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.
இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்து வருகிறார் என்பதும் எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமி நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே இந்த படத்தின் படப்பிடிப்பின் போதே எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமி மிக பொருத்தமாக இருந்தார் என்றும் அவருடைய மேக்கப்பை பார்க்கும்போது அச்சு அசல் எம்ஜிஆர் போலவே இருந்ததாகவும் படக்குழுவினர்களிடமிருந்து தகவல்கள் வந்தது.
இந்த நிலையில் நாளை எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படத்தில் எம்ஜிஆர் லுக்கை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த லுக்கை பார்த்ததும் எம்ஜிஆரை ஒரு தலைவராக மட்டுமின்றி கடவுள் போலவும் கொண்டாடி வரும் லட்சக்கணக்கான மக்கள் ஆச்சரியம் அடைவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் வரும் ஜூன் மாதம் 26ஆம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.