close
Choose your channels

ரஜினி-லோகேஷ் கனகராஜ் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இதுதானா? பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா?

Sunday, April 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜெயிலர்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் என்பதும் இதையடுத்து அவர் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் ’லால் சலாம்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இதனை அடுத்து ரஜினியின் 170 வது படத்தை ’ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ரஜினியின் 171 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இந்த படம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் ’லியோ’ படத்தை முடித்தவுடன் அவர் ரஜினியின் படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை தயாரிக்க தமிழில் மட்டுமின்றி இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் ரஜினி மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவருக்கும் சேர்த்து சம்பளம் மட்டும் 150 கோடியை தாண்டும் என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 200 கோடி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியின் திரை உலக வாழ்வில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் என்றால் அது ’பாட்ஷா’ தான். எனவே ’தலைவர் 171’ படம் ‘பாட்ஷா’ போல் ஒரு மாஸ் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் கமலுக்கு ஒரு ‘விக்ரம்’ போல், விஜய்க்கு ஒரு ‘லியோ’ போல் ரஜினிக்கு ‘தலைவர் 171’ படம் இருக்கும் என்றும் இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment