நெல்லை அருகே 'தலைவர் 170' படப்பிடிப்பு.. ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 170’ என்ற படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினர் நெல்லை வந்துள்ளனர்.
நெல்லை அருகே பனங்குடி என்ற கிராமத்தில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும், இந்த கிராமத்தில் மூன்று நாள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நீண்ட வருடங்கள் கழித்து தென் தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படப்பிடிப்பு நடைபெற இருப்பதை அடுத்து அந்த பகுதியில் உள்ள ரசிகர்கள் ரஜினியின் காரை சுற்றி வளைத்து அவரை பார்க்க முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து ரஜினிகாந்த் காருக்கு வழி அமைத்து காவல்துறையினர் அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இன்னும் மூன்று நாட்கள் அதே பகுதியில் தான் ’தலைவர் 170’ படப்பிடிப்பு நடைபெறும் என்பதால் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாசில், ரானா டகுபதி, ரித்திகா சிங், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்கும் இந்த படம் அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில், ’ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே.
#Thalaivar170 Superstar reached the location, Panakudi , Thirunelveli. pic.twitter.com/11vOTZCZ2H
— Jijesh_RJ ✪ (@jijesh_rj) October 10, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com