'தலைவர் 170' படத்தில் இணைந்த 'ஜெய்பீம்' ஒட்டுமொத்த குழு.. ஒரே ஒருவர் தான் மாற்றம்..!

  • IndiaGlitz, [Thursday,October 05 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 170’ என்ற படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது என்பதும் நேற்று படப்பிடிப்பும் தொடங்கி விட்டதாக தகவல் வெளியானது.

இந்த படத்தின் பூஜை குறித்த புகைப்படங்களை லைக்கா நிறுவனம் நேற்று தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

இந்த படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாஸில், ராணா டகுபாய், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டெக்னிக்கல் குழு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் எஸ்ஆர் கதிர் என்றும், படத்தொகுப்பாளர் ஃபிலோமின்ராஜ் என்றும், கலை இயக்குனர் கதிர் என்றும், ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் நான்கு பேருமே ஞானவேல் இயக்கத்தில் உருவான முந்தைய திரைப்படமான ’ஜெய்பீம்’ படத்தில் பணி புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஜெய்பீம்’ படத்தில் இசையமைப்பாளராக பணிபுரிந்த சீன் ரோல்டானுக்கு பதில் ’தலைவர் 170’ படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பதும் இந்த ஒரு மாற்றம் தவிர ஒட்டுமொத்த ‘ஜெய்பீம்’ டெக்னிக்கல் குழு, ‘தலைவர் 170’ படத்தின் இணைந்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக இருப்பதாகவும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தளபதி விஜய்யின் 'லியோ' சென்சார் சான்றிதழ்.. இதற்கு முந்தைய படங்களுக்கு என்ன சான்றிதழ் தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் தற்போது வெளிவந்துள்ளது.

'லியோ' சோலோ ரிலீஸ் இல்லை.. போட்டிக்கு வருகிறது பாரதிராஜா படம்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வியாழக்கிழமை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படம் வெளியாகும் தினத்தில் வேறு எந்த தமிழ் படமும்

அனுஷ்கா படம் உள்பட இந்த வாரம் எத்தனை திரைப்படங்கள்?  ஓடிடி ரிலீஸ் தகவல்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் வெளியான படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் அனுஷ்கா நடித்த 'மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் 'பொலிஷெட்டி'

அழுது கொண்டே ஜோவிகா சொன்ன சந்தோஷமான விஷயம்.. கைதட்டி வரவேற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள்..!

 நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா, பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களில் ஒருவராக களம் இறங்கி உள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவர் அமைதியாக இருந்த நிலையில் தற்போது

ஆடியோ விழாவை அடுத்து 'லியோ' டிரைலர் வெளியீட்டுக்கு சிக்கலா? விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற இருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் திடீரென இந்த விழா நிறுத்தப்பட்டது.