'தலைவர் 170' படப்பிடிப்பு எப்போது? யார் யார் நடிக்கிறார்கள்?

  • IndiaGlitz, [Tuesday,September 05 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தலைவர் 170’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் வெளிவந்த செய்தியை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி ’தலைவர் 170 ’படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மூன்றாவது வாரம் தொடங்க இருப்பதாகவும் சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் இந்த படத்திற்கான செட் அமைக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ரஜினியுடன் இந்த படத்தில் அமிதாப்பச்சன், மஞ்சுவாரியர், பகத் பாசில், ரானா , துஷாரா விஜயன் ஆகியோர் இணைந்திருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படப்பிடிப்புக்கு முன்பே வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும், உண்மை சம்பவத்தின் அடிப்படையில் ஞானவேல் இந்த படத்தின் திரைக்கதையை அமைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

’ஜெயிலர்’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றி ’தலைவர் 170’ படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அமெரிக்கா, சீனா, துபாய் என உலகம் சுற்றும் கமல்ஹாசன்.. 'பிக்பாஸ்' எப்போது?

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது அமெரிக்காவில் இருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் சீனா மற்றும் துபாய் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கமல்ஹாசன் சென்னை திரும்பிய

எனக்கு அஜித் தான் ஆசிரியர்.. ஆசிரியர் தின விழா வாழ்த்து கூறிய பிரபல நடிகர்..!

எனக்கு அஜித் தான் ஆசிரியர் என ஆசிரியர் தினமான இன்று பிரபல நடிகர் ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்

படப்பிடிப்பில் விபத்து.. 'மாரி 2' நடிகருக்கு என்ன ஆச்சு? ரசிகர்கள் அதிர்ச்சி..!

பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதை அடுத்து அவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

100 குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம்.. திரைப்படம் வெற்றியால் ரூ.1 கோடி உதவித்தொகை அறிவித்த நடிகர்..!

இந்த நிலையில் சமீபத்தில் 'குஷி' திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டா, தனக்கு 'குஷி' திரைப்படத்தில் கிடைத்த சம்பளத்திலிருந்து ஒரு கோடி ரூபாய்  100 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச

மீண்டும் இணையும் “காவல்துறை உங்கள் நண்பன்” டீம்.. விறுவிறுப்பான படப்பிடிப்பு..!

பிஆர் டாக்கீஸ் கார்ப்பரேசன் சார்பில் பாஸ்கரன் ,  ராஜபாண்டியன் இணைந்து  தயாரித்து சுரேஷ் ரவி, யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படம் இனிதே துவங்கியது !!