'தலைவர் 170' படத்தின் பூஜை புகைப்படங்கள்.. இந்த விஜய் டிவி பிரபலம் இருக்கிறாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 170’ என்ற திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று தொடங்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில் சற்றுமுன் லைக்கா நிறுவனம் பூஜை குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
இதில் ரஜினிகாந்த் உட்பட படக்குழுவினர் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ரஜினிகாந்த், இயக்குனர் ஞானவேல், மஞ்சு வாரியர் உட்பட படக்குழுவினர் இருக்கும் இந்த புகைப்படத்தில் விஜய் டிவி பிரபலமான ரக்சனும் உள்ளார். எனவே அவரும் இந்த படத்தில் நடிக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் விறுவிறுப்பான படப்பிடிப்பு நடைபெற உள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில், அடுத்தகட்ட படப்பிடிப்பு நாகர்கோவிலில் நடைபெற உள்ளது.
ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ரானா டகுபாய், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் உள்பட பலர் நடிக்கும் இந்த திரைப்படத்தை ஞானவேல் இயக்க உள்ளார். அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Thalaivar170 🕴🏻 journey begins with an auspicious pooja ceremony 🪔🌸 today at Trivandrum 📍@rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial #FahadhFaasil @RanaDaggubati @ManjuWarrier4 @ritika_offl @officialdushara @srkathiir @GMSundar_ @RakshanVJ @KKadhirr_artdir @philoedit… pic.twitter.com/t5LHE6sgoA
— Lyca Productions (@LycaProductions) October 4, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments