'தலைவர் 170' படப்பிடிப்பு எங்கே? எப்போது? ரஜினி பேசப்போகும் புதிய ஸ்லாங்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 170’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த தகவல் கசிந்து உள்ளது .
லைகா தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ’ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் ’தலைவர் 170’. இந்த படத்திற்காக லொக்கேஷன் பார்க்கும் பணி முடிவடைந்து விட்டதாகவும் முதல்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம் மற்றும் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது.
மேலும் முதல் கட்ட படப்பிடிப்பில் ரஜினியுடன் பகத் பாசில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ரானா டகுபதி ஆகியோர் நடிக்க இருக்கும் நிலையில் அவர்கள் அடுத்தடுத்து படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள உள்ளனர்.
ரஜினிகாந்த் இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் போலி என்கவுண்டர் குறித்த கதையை இந்த முறை ஞானவேல் கையில் எடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த கதை நடைபெறும் பகுதி கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் என்பதால் அந்த பகுதி ஸ்லாங்கை ரஜினிகாந்த் பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments