'தலைவர் 169': மீண்டும் ரஜினியுடன் ஜோடி சேருகிறாரா இந்த பிரபல நடிகை?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகவிருக்கும் ’தலைவர் 169’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பதும் இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை ஏப்ரலில் நடைபெற உள்ளதாகவும் மே மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது ’பீஸ்ட்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக இருக்கும் இயக்குனர் நெல்சன் அந்த பணியை முடித்த உடன் ’தலைவர் 169’ படத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ’தலைவர் 169’ திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யாராயுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கர் இயக்கிய ‘எந்திரன்’ திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா ராய், மீண்டும் அவருக்கு ஜோடியாக நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஐஸ்வர்யாராய் தற்போது மணிரத்தினம் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது தெரிந்ததே.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout