'தலைவர் 168' படத்தின் புதிய அப்டேட்! அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,February 24 2020]

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகிவரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 168வது படத்தின் படப்பிடிப்பில் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போதைக்கு ‘தலைவர் 168’ என்ற டைட்டிலில் அழைக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில் ரஜினியுடன் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். டி. இமான் இசையமைத்து வரும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதனை அடுத்து மீண்டும் அதே ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் புதிதாக பிரபல எழுத்தாளரும் குணச்சித்திர நடிகருமான வேலராமமூர்த்தி இணைந்தார் என்பதை இன்று காலை பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைப்பக்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு ’தலைவர் 168’ படத்தின் புதிய அப்டேட் ஒற்றை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து ரஜினி ரசிகர்கள் இந்த அப்டேட்டிற்காக மரண வெயிட்டிங்கில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

டிரம்ப் உரையில் விவேகானந்தர், சச்சின், கோஹ்லி:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று இந்தியாவுக்கு வருகை தந்த நிலையில் இன்று அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 'நமஸ்தே டிரம்ப்' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

'மாஸ்டர்' இயக்குனரின் திடீர் விசிட்: பிரபல நடிகரின் மகன் ஆச்சரியம்

மாநகரம் மற்றும் 'கைதி' ஆகிய இரண்டு படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ்க்கு மூன்றாவது படமே தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

'கர்ணன்' படப்பிடிப்பு குறித்து தனுஷின் முக்கிய டுவீட்!

தனுஷ் நடித்த 'அசுரன்' மற்றும் 'பட்டாஸ்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்ற நிலையில் தற்போது அவர் என்ற 'ஜகமே தந்திரம்'

ரஜினி ஆஜராவதற்கு விலக்கு? விசாரணை ஆணையம் அதிரடி முடிவு

கடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின் நூறாவது நாள் போராட்டத்தில் பயங்கர வன்முறை வெடித்தது.

அதிபர் ட்ரம்பை கட்டித் தழுவி வரேவேற்றார் பிரதமர் நரேந்திர  மோடி

அதிபர் ட்ரம்ப்பின் விமானம் குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.