'தலைவர் 168' படத்தின் புதிய அப்டேட்! அதிகாரபூர்வ அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகிவரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 168வது படத்தின் படப்பிடிப்பில் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போதைக்கு ‘தலைவர் 168’ என்ற டைட்டிலில் அழைக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில் ரஜினியுடன் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். டி. இமான் இசையமைத்து வரும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதனை அடுத்து மீண்டும் அதே ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் புதிதாக பிரபல எழுத்தாளரும் குணச்சித்திர நடிகருமான வேலராமமூர்த்தி இணைந்தார் என்பதை இன்று காலை பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைப்பக்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு ’தலைவர் 168’ படத்தின் புதிய அப்டேட் ஒற்றை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து ரஜினி ரசிகர்கள் இந்த அப்டேட்டிற்காக மரண வெயிட்டிங்கில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
#Thalaivar168 update Today at 6pm!
— Sun Pictures (@sunpictures) February 24, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com