பக்கா கிராமத்து பெண்: இணையத்தில் வைரலாகும் 'தர்பார்' மீனா புகைப்படம்!

  • IndiaGlitz, [Wednesday,December 25 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த், மீனா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்வதை போல் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட மீனாவின் புகைப்படம் இணையதளத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறது

பக்கா கிராமத்து பெண்ணாக அந்த புகைப்படத்தில் மீனா தோன்றுகிறார். ஏற்கனவே இந்த படம் கிராமத்து கதையம்சம் கொண்ட படம் என்ற செய்தி வெளியான நிலையில் அந்த செய்தி தற்போது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பில் குஷ்பு கலந்து கொண்டதாக அவர் தனது டுவிட்டரில் கூறியிருந்த நிலையில் தற்போது மீனாவும் கலந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சூரி, உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.