ரஜினி-முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி!

  • IndiaGlitz, [Wednesday,March 27 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படமான 'தலைவர் 166' திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் மும்பையில் தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தில் 'சந்திரமுகி ' படத்திற்கு பின் மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். 'தளபதி' படத்திற்கு பின் மீண்டும் ரஜினியுடனும், 'துப்பாக்கி' ,'ஸ்பைடர்' படங்களுக்கு பின் மீண்டும் முருகதாசுடன் அவர் இணைகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

எம்.ஜி.ஆர் பாடலா? சிவாஜி பாடலா? குழப்பத்தில் பிரேமலதா

அதிமுக கூட்டணியில் கடைசி நேரத்தில் பெரும் சர்ச்சைக்கு பின் இணைந்த தேமுதிக வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட நான்கு தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து பெற்றது.

தனுஷின் வில்லனாக மாறும் ஹீரோ நடிகர்!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

அடுத்தடுத்த நாட்களில் ஓவியாவின் இரண்டு பட டிரைலர்கள்!

ஓவியா நடித்து வரும் இரண்டு படங்களின் டிரைலர்கள் மார்ச் 27, மார்ச் 28 என அடுத்தடுத்த நாட்களில் வெளிவரவுள்ளது

'கமான் பாப்பா' தல தோனிக்கு ஊக்கம் கொடுத்த மகள் ஜிவா

நேற்று டெல்லியில் நடைபெற்ற சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தூத்துகுடி தொகுதியில் திடீரென களமிறங்கிய திரைப்பட இயக்குனர் !

ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் போட்டியிட நேற்றுடன் மனுதாக்கல் முடிவடைந்த நிலையில்...