ரஜினி-முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி!

  • IndiaGlitz, [Wednesday,March 27 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படமான 'தலைவர் 166' திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் மும்பையில் தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தில் 'சந்திரமுகி ' படத்திற்கு பின் மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். 'தளபதி' படத்திற்கு பின் மீண்டும் ரஜினியுடனும், 'துப்பாக்கி' ,'ஸ்பைடர்' படங்களுக்கு பின் மீண்டும் முருகதாசுடன் அவர் இணைகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது