சிம்பு, தனுஷை அடுத்து விஷாலுக்கு கிடைத்த ஆன்ந்தம்

  • IndiaGlitz, [Tuesday,August 29 2017]

சிம்புவின் லவ் ஆன்ந்தம், தனுஷின் சச்சின் ஆன்ந்தம் ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து ஹிட்டாகியுள்ள நிலையில் இன்று விஷால் பிறந்த நாளை முன்னிட்டு விஷால் ஆன்ந்தம் வெளியாகியுள்ளது.

'தலைவன் வருகிறான் என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த பாடலில் ''வீரம் பாதி, ஈரம் பாதி, வெல்லும் எங்கள் விஷால் நீதி' என்ற வரிகளுடன் ஆரம்பமாகிறது. இஷான் தேவ் இசையில் உருவாகியுள்ள இந்த ஆன்ந்தம், முருகன் மந்திரம் என்பவரால் எழுதப்பட்டுள்ளது. கா.ராஜீவ்காந்தி இயக்கியுள்ள இந்த பாடலுக்கு குரல் கொடுத்தவர்கல் நிகில் மாத்யூ மற்றும் இஷான் தேவ்

இந்த விஷால் ஆன்ந்தம் நேற்றிரவு வெளியாகி விஷால் ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக,

நேசம் கொண்ட தலைவன் வந்தான் நெஞ்சே நிமிர்ந்து நில்லு
நெருப்பை போல தீமை எரிக்கும் நேர்மை இவன் தான் சொல்லு,

பாரம் எல்லாம் தூரம் தள்ளி
எந்நாளுமே நல்ல செய்தி சொல்லி
தலைவன் வருகின்றான், ஒரு தலைவன் வருகின்றான்

போன்ற வரிகள் விஷால் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

More News

அதிமுக பொதுக்குழு கூடும் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

சமீபத்தில் அதிமுகவின் இரு அணிகளான ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் பரபரப்பாக உள்ளது. தினகரன் அணியினர் எந்த நேரமும் ஆட்சியை கவிழ்க்கலாம் என்ற நிலையில், சசிகலாவை கட்சியில் இருந்தும், பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் நீக்க விரைவில் கட்சியின் பொதுக்குழு கூடவுள்ளதாக கூறப்பட்டது.

அஜித்தின் விவேகம்: 4 நாட்கள் தமிழக மற்றும் உலக வசூல் நிலவரம்

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்ற போதிலும் சென்னையில் நான்கு நாட்களில் சாதனை வசூல் செய்தது என்பதை காலையில் பார்த்தோம்.

மீண்டும் களத்தில் குதித்த ஓவியா: ரசிகரகள் மகிழ்ச்சி

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஆர்த்தி மற்றும் ஜூலி மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ள நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஓவியா மீண்டும் தனது டுவிட்டரில் ஒரு டுவீட்டை தட்டிவிட்டுள்ளார்.

கிளிசரின் போடாமல் நடிகையை அழ வைத்த இயக்குனர்

சமீபத்தில் வெளியான ராம் இயக்கிய 'தரமணி' திரைப்படம் பரவலாக பாராட்டப்பட்டிருப்பதோடு வசூல் ரீதிலும் வெற்றிபெற்றுள்ளது.

ஆன்மீக சாமியார் ராம் ரஹிம் சிங் தண்டனை அறிவிப்பு

ஆன்மீக அமைப்பு ஒன்றின் தலைவரான ராம் ரஹிம் சிங் என்பவர் தன்னுடைய ஆசிரமத்தில் தங்கியிருந்த இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என்று சமீபத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டது.