'தல' வலிமை ஷூட்டிங் தொடங்கியாச்சு....ரசிகர்கள் மகிழ்ச்சி....!

  • IndiaGlitz, [Saturday,July 10 2021]

பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், தல அஜித் நடித்துவரும் திரைப்படம் தான் வலிமை. இப்படத்திற்கான அப்டேட்டுகள் குறித்து ரசிகர்கள் சாமியார்கள் முதல் கிரிக்கெட் பிரபலங்கள் வரை, அரசியல்வாதிகளையும் விட்டுவைக்காமல் கேட்டு வருகின்றனர். வருகின்ற ஜூலை-15-ஆம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் திரைப்படங்கள் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வலிமை படத்திற்கான சண்டைக்காட்சிகளையும், அதனுடனான இணைப்பு காட்சிகளையும் எடுக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. அந்தவகையில் சண்டைக்காட்சிகளுக்கு முன் வரும் இணைப்பு காட்சிகளை, ஹைதராபாத்தில் எடுக்க இயக்குனர் வினோத் திட்டமிட்டுள்ளார். அதற்கான பணிகளை இன்று படக்குழு துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தல ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக இருப்பதால், அவர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

 

More News

'D43' படத்தில் இருந்து கார்த்திக் நரேன் விலகலா? உறுதி செய்யும் புகைப்படம்!

தனுஷ் நடித்துவரும் 'D43' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

சிம்புவின் 'நதிகளிலே நீராடும் சூரியன்' படப்பிடிப்பு எப்போது?

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வந்த 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

டெண்டர் பிரச்சனை....! மாநகராட்சி சோசியல் மீடியாவை கையாள எவ்வளவு கோடிகள்....!

சென்னை மாநகராட்சி சோசியல் மீடியாவை கையாள, கோடிக்கணக்கில் டெண்டர் வழங்கப்பட்டதாக கூறிய சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி குறித்து தயக்கமா? பாலூட்டும் தயார்மார்களுக்கு எளிய விளக்கம்!

கொரோனா தடுப்பூசியை இதுவரை 18 வயதிற்கும் மேல் உள்ளவர்கள் மட்டுமே ஆர்வத்துடன் செலுத்திக் கொள்கின்றனர்.

பிளீச்சிங் பவுடரை உண்ட சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.....!

பிளீச்சிங் பவுடர்  என்று தெரியாமல், அதை சாப்பிட்ட சிறுமி தற்போது எலும்பும் தோலுமாக காட்சியளிக்கிறார்.