'வலிமையில்' தல வேற லெவல் ஆக்சன்: ஒளிப்பதிவாளருடன் இணைந்து டுவிட் போட்ட பிரபலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
’வலிமை’ திரைப்படத்தில் தல வேற லெவல் ஆக்ஷன் என ’வலிமை’ படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவுடன் டுவிட் ஒன்றை பிரபலம் ஒருவர் பதிவு செய்துள்ளது வைரலாகியுள்ளது.
தல அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’வலிமை’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்றும் வெளிநாட்டில் ஒரே ஒரு ஆக்ஷன் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியது உள்ளது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் அப்டேட் கேட்டு தொடர்ச்சியாக அஜித் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தும் படக்குழுவினர் கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் இந்த படத்தின் தகவல்கள் எப்படியாவது சமூக வலைதளங்களில் கசிந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான ஆர்கே சுரேஷ் ’வலிமை’ படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில், தல வேற லெவல் ஆக்ஷன் ’வலிமை’ படத்தில் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நீரவ்ஷாவிடம் இந்த படம் குறித்த தகவலை அவர் கேட்டிருப்பார் என்று தெரிகிறது. அப்டேட் இல்லாமல் அதிருப்தியில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு இந்த அப்டேட் மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
#valimai cameraman Nirav Shah ....thala Vera level action in valimai ?????????? pic.twitter.com/c7r0m55nwx
— RK SURESH (@studio9_suresh) February 28, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments