வேதாளம்: டிரைலருக்கு பதிலாக வெளியான டீசர்

  • IndiaGlitz, [Thursday,October 29 2015]

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜீத் நடித்த 'வேதாளம்' திரைப்படத்தின் டிரைலர் இன்று அதிகாலை 12 மணிக்கு வெளியாகும் என அஜீத் ரசிகர்கள் உள்பட அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில் டிரைலருக்கு பதிலாக டீசர் மட்டுமே வெளியாகியுள்ளது. டிரைலர் மற்றொரு தேதியில் வெளியாகும் என கூறப்படுகிறது.

வேதாளம்' படத்தில் இடம்பெற்றிருந்த 'வீர விநாயகா' என்ற பாடலின் 20 வினாடி டீசர் இன்று அதிகாலை இணையதளத்தின் மூலம் வெளியாகியுள்ளது. டிரைலர் வெளிவராத ஏமாற்றம் இருந்தபோதிலும், வழக்கம்போல் இந்த டீசரும் அஜீத் ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் 'வேதாளம்' திரைப்படம் இன்று அல்லது நாளை சென்சார் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த படம் வரும் தீபாவளி தினமான நவம்பர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளதால் புரமோஷன் பணிகளை படக்குழுவினர் விறுவிறுப்பாக செய்து வருகின்றனர்.

More News

பிரபல இயக்குனர் சேரனின் முக்கிய அறிக்கை

சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலில் நடிகர்கள் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டாலும், தேர்தலுக்கு பின்னர் இரு அணிகளும் ஒன்றிணைந்து பணியாற்ற தொடங்கிவிட்டனர்...

சமந்தாவின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது

விஜய், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை சமந்தாவின் நீண்ட நாள் கனவு, பழம்பெரும் நடிகை...

'தூங்காவனம்' படத்தின் சென்சார் விபரங்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த் 'தூங்காவனம்' படத்தை இன்று சென்சார் அதிகாரிகள் பார்த்து கொண்டிருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தோம்...

'கபாலி'யால் வாழ்க்கையின் முதல் அனுபவத்தை பெற்ற இளம் நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் உள்பட படக்குழுவினர் அனைவரும் மலேசியா சென்றுள்ளனர்...

சிம்புவின் 'இது நம்ம ஆளு' இசை வெளியீடு எப்போது?

'பசங்க' பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இது நம்ம ஆளு' திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் சிம்பு-நயன்தாரா இணைந்து நடித்துள்ளனர்...